Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

வெயிலைப் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வம் - புதுச்சேரியில் 81.84 சதவீதம் வாக்குப்பதிவு :

புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 10.04 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், பெண்கள் 5.31 லட்சம் பேரும், ஆண்கள் 4.72 லட்சம் பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 116 பேர் உள்ளனர். 11,915 பேர் மாற்றுத்திறனாளிகள். 80 வயதுக்கு மேல் 17,041பேர். புதிய வாக்காளர்கள் 31,864 பேர் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர்களுக்கு100 சதவீதம் வாக்கா ளர் அடையாள அட்டை தரப்பட் டுள்ளது.

வாக்காளர் வசதிக்காக வாக் காளர் விவர சீட்டுகள் தரப்பட்டன. ஆனால் வாக்களிக்க வரும்போது இந்த விவரச் சீட்டை அடையாள சான்றாக ஏற்க முடியாது. வாக்கா ளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று எடுத்து வரவேண்டும் என தெரி விக்கப்பட்டது..

புதுச்சேரியில் உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இங்கு இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனால் இங்கு 1,558 கன்ட்ரோல் யூனிட், 1,677 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,558 வாக்குப்பதிவு சரிபார்ப்புஇயந்திரங்கள் பயன்படுத்தப்பட் டன. ஏனாம், மாஹே நீங்கலாக 28 தொகுதிகளில் மகளிர் கொண்டேசெயல்படும் ஒருவாக்குச்சாவடி தொகுதி தோறும் அமைக்கப்பட் டது. தேர்தலுக்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக 6, 835 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் 2,833 பெண் வாக்குச்சாவடி அலுவலர்களும், 719 மத்திய அரசு ஊழியர்களும் அடங்குவர். பாதுகாப்பு பணியில் 2420 மாநில காவல்துறையினரும், 901 ஐஆர்பிஎன் காவலர்களும், 1490 ஊர்க்காவல் படையினரும் (ஆயிரம் பேர் கர்நாடகத்திலிருந்து வந்துள்ளனர்), மத்திய ஆயுத காவல் படையினர் 40 கம்பெனியும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் 330 வாக்குச் சாடிகள் பதற்றமானவை. அதில் 16 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. காலை யில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

பல பகுதிகளில் மக்கள் கோடை வெயிலையும் பொருட் படுத்தாது வாக்களித்தனர். முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.

அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வசதியாக சம்பளத் துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என தேர்தல் கமிஷன்உத்தரவிட்டிருந்தது. இதனால் வர்த்தக நிறுவனங்கள், தனியார்நிறுவனங்கள், தொழிற்சாலைக ளுக்கு விடுமுறை விடப்பட்டிருந் தது. தேர்தலையொட்டி நகரின் பிர தான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சில ஓட்டல்கள் மட்டும் இயங்கின. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள்தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவ டிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டனர். வாக்களிக்க வர முடியாதவர்களை வாகனங்கள் மூலம் அழைத்து வந்து வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேர்தல் துறை சார் பில் வாக்குச்சாவடிகளில் வெயிலின்தாக்கத்தை குறைக்க பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

புதுச்சேரி தேர்தல் துறையானது வாக்குப்பதிவு சதவீதத்தை தொடர்ந்து வெளியிடுவதில் சுணக்கம் காட்டியது. தொடர்ந்து தராத தால் பத்திரிக்கையாளர்கள் அதி ருப்தி தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணியளவில் புதுச்சேரி முழுக்க 16.97 சதவீதம் வாக்குகள் பதிவானது. பகல் 1 மணிக்கு புதுச்சேரி 53.72 சதவீதம் வாக்குகள் பதிவானது. மாலையில் வாக்குப்பதிவு மேலும் விறுவிறுப்பானது.

இறுதியில் புதுச்சேரி மாவட் டத்தில் 81.84 சதவீத வாக்குகள் பதிவாயின. காரைக்கால் மாவட் டத்தில் 80.01 சதவீத வாக்குகள் பதிவாயின.

முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x