Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

அரியலூர் 82.29%, பெரம்பலூர் 79.04%, புதுக்கோட்டை 76.32% வாக்குப்பதிவு : அரவக்குறிச்சி தொகுதியில் அதிகபட்சமாக 88.80 சதவீதம்

அரியலூர்

அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் 82.29 சதவீத வாக்குகள் பதிவாகின.

அரியலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்கள், 1,32,670 பெண் வாக்காளர்கள், 7 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,64,012 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல, ஜெயங் கொண்டம் தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத் தம் 2,66,013 வாக்காளர்கள் உள் ளனர். மாவட்டத்தில் 2,62,998 ஆண் வாக்காளர்கள், 2,67,017 பெண் வாக்காளர்கள், 10 இதர வாக்காளர்கள் என 5,30,025 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க அரியலூர் தொகுதியில் 376 வாக்குச்சாவடிகள் ஜெயங்கொண்டம் தொகுதியில் 377 வாக்குச்சாவடிகள் என 753 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், அரிய லூர் தொகுதியில் 78 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 52 வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது. அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகளிலும் காலையிலிருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். இதில், அரியலூர் தொகுதியில் 84.58 சதவீதமும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 80 சதவீதமும் என மாவட்டத்தில் 82.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டப் பேரவை தொகுதிகளிலும் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிவில் பெரம்பலூர் தொகுதியில் 78.12 சதவீதம், குன்னம் தொகுதியில் 80.06 சதவீதம் என மாவட்டத்தில் 79.04 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  வெங்கட பிரியா, சார் ஆட்சியர் பத்மஜா ஆகியோர் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி, வேலூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும், குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.டி. ராமச்சந்திரன் அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிலும், பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகரன் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம் அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை 75.40, விராலி மலை 85.43, புதுக்கோட்டை 72.94, திருமயம் 75.89, ஆலங்குடி 78.44, அறந்தாங்கி 70.37. மாவட்டத்தில் சராசரியாக 76.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் கரூர் 2,44,174, அரவக்குறிச்சி 2,13,110, கிருஷ்ண ராயபுரம் 2,12,644, குளித்தலை 2,26,785 என மொத்தம் 8,96,713 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப் பதிவு தொடங்கியது முதலே வாக் காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். வாக்குப்பதிவு நிறைவில், கரூரில் 83.50, அரவக்குறிச்சியில் 88.80, கிருஷ்ணராயபுரத்தில் 84.14, குளித் தலையில் 86.15 என சராசரியாக 4 தொகுதிகளிலும் சேர்த்து 83.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x