Published : 05 Apr 2021 03:15 am

Updated : 05 Apr 2021 03:15 am

 

Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் ஹெச்.ராஜா வலியுறுத்தல் :

காரைக்குடி: காரைக்குடியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருமானவரித் துறையினர் உறுதி செய்யப்பட்ட தகவல் அடிப்படையில் தான் சோதனை நடத்துகின்றனர். இந்த சோதனைக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை. அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்துள்ளது.

பிரதமர் மோடி குறித்து மு.க.ஸ்டாலின் மரியாதை இல்லாமல் பேசுகிறார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். மோடியை அவமரியாதையாக பேசியது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் புகார் அனுப்பியுள்ளோம். நடவடிக்கை இல்லாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறினார்.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x