Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட - சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி :

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட, இந்திய கிரிக்கெட்ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் 6 நாட்களுக்குப் பிறகு நேற்றுமருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

47 வயதான சச்சின் டெண்டுல்கர் கடந்த பிப்ரவரி 27ம் தேதிகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் 6 நாட்களுக்குப் பின்னர் நேற்று சச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

இதுகுறித்து சச்சின் தனதுட்விட்டர் பதிவில், ‘‘அனைவருடைய வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. முன்னெச்சரிக்கை கருதி மருத்துவர்களின் அறிவுரையின் பேரில்மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். அடுத்த சில நாட்களில் வீட்டுக்கு திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உலகக் கோப்பை வெற்றியின் 10வது ஆண்டைக் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் என்னுடைய அணி வீரர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ராய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் சச்சின் தலைமையில் பங்கேற்ற இந்திய லெஜன்ட்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் கலந்து கொண்ட இர்பான் பதான், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொடரை நேரில் கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x