Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட - மக்களை நேசிக்கும் தலைமை உருவாக வேண்டும்: கமல்ஹாசன் :

கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக்கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என மநீமதலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோவை பெரியகடை வீதி நான்குமுனை சந்திப்பிலிருந்து, ஒப்பணக்கார வீதிக்கு செல்லும் வழியில் உள்ள கடை ஒன்றின் மீது நேற்று முன்தினம் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். கல்வீச்சில் தாக்கப்பட்ட கடைக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் நேற்று முன்தினம் மாலை வந்தார். அக்கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியரிடம் நடந்த சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர், கமல்ஹாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாககமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘ஆதித்யநாத் வருகையின் போது, பாஜக செய்தஅடாவடிகள் கண்டனத்துக்குரியவை. கோவையில் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்ட ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து மக்களை நேசிக்கக்கூடிய ஒரு தலைமை உருவாக வேண்டும் என நான் தொடர்ந்துவலியுறுத்துவது இதற்காக தான்.‘கலவர ஸ்பெஷலிஸ்டுகளை’ ஒற்றுமையால் முறியடிப்போம்,’’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம், ராம்நகர் மற்றும் இவற்றை சார்ந்த பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது ,‘‘நான் கடந்த 40 ஆண்டுகளாக சினிமா தவிர்த்து நற்பணி சேவை பணியில் உள்ளேன். எனது ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு, அவர்களை நற்பணியின் பக்கம் திருப்பி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே எங்களது வாழ்க்கை முறை. எங்களுக்கு மக்கள் அதிகாரத்தை கொடுத்தால் 40 ஆண்டுகளில் செய்ய முடியாமல் போனதை, 4 ஆண்டுகளில் செய்து காட்ட முடியும்’’என்றா ர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x