Published : 31 Mar 2021 03:17 AM
Last Updated : 31 Mar 2021 03:17 AM

ஆம்பூர் அருகே ரூ.1.49 லட்சம் பறிமுதல் :

ஆம்பூர் அருகே வாகன சோதனையில் 1.49 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வெளதிகாமணிபெண்டா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ் வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, அதில் ரூ.1.49 லட்சம் இருப்பதும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x