Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு - அமித்ஷா, நட்டா தமிழில் வாழ்த்து :

சென்னை

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த பண்டிகைகளில் பங்குனி உத்திரம் முக்கியமானது. தமிழகம் முழுவதும் அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனிஉத்திரத் திருவிழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பாஜக தேசியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான பங்குனி உத்திரத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல்! வீரவேல்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக சகோதர, சகோதரிகளுக்கு புனித பண்டிகையான பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பவுர்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வேல் வேல்! வெற்றிவேல்!” என்று கூறியுள்ளார்.

முருகப் பெருமானை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சமீபத்தில்வேல் யாத்திரை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x