Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

அரசு ஊழியர்களின் சொத்து, பணித்திறனை ஆய்வு செய்ய - ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்களின் சொத்து, பணித்திறன் மற்றும் நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் அருகே விற்பனை செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ.12 லட்சம் என முத்திரை தீர்வை துணை ஆட்சியர் நிர்ணயம் செய்துள்ளார். அதை மறுமதிப்பீடு ஆய்வு செய்த பதிவுத் துறை தலைவர் ஒரு ஏக்கரின் விலை ரூ.51 லட்சம் என மறுநிர்ணயம் செய்துள்ளார். நிலத்தின் மதிப்பை உயர்த்தி நிர்ணயம் செய்த பதிவுத் துறை தலைவரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, நிலத்தை வாங்கிய ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில், “தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அப்பகுதியில் ஒரு ஏக்கர் ரூ.25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை விற்பனையாகி உள் ளது. அதை முறையாக ஆய்வு செய்யாமல் துணை ஆட்சியர் குறைவான தொகையை நிர்ணயம் செய்தது தவறு என்பதால் பதிவுத் துறை தலைவர் தனக்குள்ள அதிகாரத்தின்படி தாமாக முன்வந்து ஆய்வு செய்து ரூ.51 லட்சம் என நிர்ணயம் செய்துள்ளார். இதில் எந்த தவறும் இல்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது.

அரசு தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட் டார். மேலும் நீதிபதி தனது உத்தரவில், “தொடர் புடைய நிலத்தின் மதிப்பை குறைவாக நிர்ண யித்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது அதிருப்தி யளிக்கிறது. அரசின் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்தும் அதிகாரிகள் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அவை சாதாரண மக்களையும், பயனாளிகளையும் சென்றடைகிறதா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. அரசு ஊழியர்களின் சொத்துகள், பணித்திறன், நேர்மை ஆகியவற்றை ஆய்வு செய்ய தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களி லும் ஊழல் தடுப்பு பிரிவை அமைக்க வேண் டும்” என பதிவுத்துறை தலைவருக்கும் உத்தரவிட்டார். அந்த பிரிவுகள் அளிக்கும் அறிக்கையை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஊழல் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் தொலைபேசி, மின் னஞ்சல் விவரங்களை வெளியிட வேண்டும், எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x