Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

பரவலை தடுக்க கரோனா தடுப்பூசி போடுவது அவசியம் : ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்

புதுச்சேரி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டுபுதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை துறை சார்பில் 'கரோனாவும் சிறுநீரகமும்' என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசுகையில், “கரோனாபெருந்தொற்றின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’’என்றார்.

நிகழ்வில் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், மாநிலசுகாதார திட்ட இயக்குநர் ராமுலு, மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, உலகளாவிய பார்வைக்கான சென்னை மையம் இணைய வழி மூலம் ஏற்பாடு செய்திருந்த அகண்ட தமிழ் உலக மூன்றாவது மாநாட்டினை புதுச்சேரி ராஜ் நிவாஸிலிருந்து ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

இதனிடையே கலித்தீர்த் தாள்குப்பம் விநாயகர் கோயில் பின்புறம் அமைந்துள்ள ஊரல் குளம், கழிவுநீர் கலந்து உபயோகமற்று இருப்பதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று மாலை ஆளுநர் தமிழிசை நேரில் சென்று பார்வையிட்டார். ஆளுநர் வருவதை அறிந்து அக்கழிவுநீர் கலக்கும் வாய்க்கால்கள் அனைத்தும் அவசரமாக அடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டார். மேலும் அக்குளம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதையும் அறிந்தார்.

இதையடுத்து குளத்துக்கு வரும் வாய்க்கால்கள் அனைத் தையும் தூர்வாரி சுத்தப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதோடு எரியாத தெருமின் விளக்குகளையும் சரி செய்து கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x