Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்

மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். கடனைத் தீர்ப்பதற்கான வழிகளை யோசிப்பீர்கள்.ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.மிதுனம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும்.கடகம்: திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருந்துவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வாகனம் செலவு வைக்கும்.சிம்மம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங் கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள்.கன்னி: பெற்றோர் உங்களின் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள்.எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.விருச்சிகம்: எதிர்பாராத பணவரவு இருக்கும். சகோதரர் வகையில் சுபச் செலவு ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.தனுசு: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாயுக் கோளாறால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும். எனவே உணவில் கட்டுப்பாடு அவசியம். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.மகரம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிலர் புது வாகனம்வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.கும்பம்: தடைபட்ட காரியங்கள் எளிதில் முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி கிட்டும்.மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். முன்கோபம் குறையும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x