Published : 22 Mar 2021 03:12 AM
Last Updated : 22 Mar 2021 03:12 AM

ஒரு நாள் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு :

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரையும் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோத உள்ளன. இதன் ஆட்டங்கள் வரும் 23, 26, 28 ஆகிய தேதிகளில் புனே நகரில் நடக்கிறது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர், நீக்கப் பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களாக மாட் பார்க்கின்ஸன், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேட்டிங்கில் ஜோ ரூட்டுக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர காத்திருப்பு வீரர்களாக ஜேக் பால், கிறிஸ்ஜோர்டன், டேவிட் மாலன் ஆகி யோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அணி விவரம்:

மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, ஆதில் ரஷித், மாட் பார்க்கின்ஸன், மார்க் உட்.

காத்திருப்பு வீரர்கள்: ஜேக் பால்,கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x