Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

டிஎன்பிஎஸ்சி நடத்திய தொழில் வணிகத் துறை உதவி இயக்குர் தேர்வு முடிவு வெளியீடு :

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய தொழில் மற்றும் வணிகத் துறை உதவி இயக்குநர் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான (பொறுப்பு) கே.நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில் வணிகத் துறை உதவி இயக்குநர் பதவியில் 11 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஜனவரி 9, 10-ம் தேதிகளில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வில் 829 பேர் கலந்துகொண்டனர். அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அத்தேர்வர்கள் சான்றிதழ்களை மார்ச் 22 முதல் 30-க்குள் அரசு இ-சேவை மையத்தின் வழியாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x