Published : 15 Mar 2021 03:11 AM
Last Updated : 15 Mar 2021 03:11 AM

பாக். எல்லையில் 250 தீவிரவாத முகாம்கள் :

பாகிஸ்தான் எல்லையில் 250 தீவிரவாத முகாம்கள் செயல்படுகின்றன. காஷ்மீரில் சுமார் 200 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என்று ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் கடைபிடிப்பதாக பாகிஸ்தான் உறுதி அளித்தது. எனினும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தீவிரவாத முகாம்கள் தொடர்ந்து செயல்படுவதை இந்திய உளவுத் துறை உறுதி செய்துள்ளது.

எல்லையில் தீவிரவாத முகாம்களில் இருந்து காஷ் மீருக்குள் நுழைய முயற்சி செய்து வருவதாக தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x