Published : 15 Mar 2021 03:11 AM
Last Updated : 15 Mar 2021 03:11 AM

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து 164 ரன் குவிப்பு :

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதிமுதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று அகமதாபாதில் 2-வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், ஜேசன் ராயும் களமிறங்கினர். ஜாஸ் பட்லரை, முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய டேவிட் மலான் 23 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து சஹல் பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் வந்த ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாட முற்பட்டு 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். ஜேசன் ராய் ஓரளவுக்கு நிலை ஆடி 35 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த நிலையில் சுந்தர் பந்தில் அவுட்டானார்.

பின்னர் வந்த இயன் மோர்கன் 20 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸும், சாம் கரணும் இணைந்து விளையாடினர். கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் 24 ரன்களுக்கு அவுட்டானார். 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை இங்கிலாந்து சேர்த்தது. சாம் கரண் 6 ரன்களுடனும், கிறிஸ் ஜோர்டன் ரன் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் சுந்தர், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், புவனேஸ்வர் குமார், சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ... ஓவர்களில் ... விக்கெட் இழப்புக்கு எடுத்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x