Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

பராமரிப்புப் பணி காரணமாக வரும் 15,17-ல் - 5 சிறப்பு ரயில்கள் கோவைக்கு பதில் போத்தனூரில் நின்று செல்லும் : சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவை

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை ரயில்நிலையம்-போத்தனூர் ரயில் நிலையம் இடையே உள்ள பாலங்களை சீரமைக்கும் பணிநடைபெறுவதால் மார்ச் 15,17-ம் தேதிகளில் கோவை ரயில்நிலையம் வழியாக செல்லும் ரயில்களின் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பின்வரும் ரயில்கள் கோவை ரயில்நிலையம் வழியாக செல்லாமல், போத்தனூர் நிலையத்தில் நின்று செல்லும். தன்பாத்-ஆலப்புழா சிறப்பு ரயில் (எண்:03351) போத்தனூர் ரயில் நிலையத்தில் காலை 8.32 மணிக்குநின்று செல்லும். டெல்லி- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண்:02626) நண்பகல்12.27மணிக்கும், கேஎஸ்ஆர் பெங்களூரு-எர்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்:02677) பிற்பகல் 1.02 மணிக்கும், ஆலப்புழா-தன்பாத் சிறப்பு ரயில் (எண்:03352) நண்பகல் 12.17 மணிக்கும், எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு சிறப்பு ரயில் (எண்:02678) நண்பகல் 12.47 மணிக்கும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மேலும், கண்ணூர்-கோவை சிறப்பு ரயில் (எண்:06607) மார்ச் 15,17-ம் தேதிகளில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். கோவை-கண்ணூர் சிறப்பு ரயில் (எண்:06608) கோவை ரயில்நிலையத்துக்கு பதில், போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x