Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள - மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டி யிடுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காலை திமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், திமுக ஒதுக்கும் தொகுதிகள் தங் களுக்கு போதுமானதாக இல்லை என அக்கட்சியின் மாநில செயலர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியும் திமுக ஒதுக் கும் தொகுதிகளின் எண்ணிக்கை திருப்தி யாக இல்லாததால் அதிருப்தியில் உள் ளது. இதற்கிடையே நேற்று மாலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமை யிலான குழு, ஸ்டாலின் தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் 6 தொகுதிகள் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தி யாளர்களிடம் வைகோ கூறியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மதிமுக வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திராவிட இயக்க பூமியில் இந்துத்துவா சக்திகள், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இந்தி, சம்ஸ்கிருதத்தை திணித்து, சனாதனத்தை நிர்பந்தமாகக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் அதை பரவச் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. எந்த கொள்கைகளுக்காக லட்சக்கணக்கான திராவிட இயக்கத் தொண்டர்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்தி பாடுபட்டார்களோ, அந்த தமிழகத்தில், திராவிட இயக்க பூமியில் பாஜக போன்ற சக்திகளை முறியடிக்க முடிவெடுத்து, அதன் அடிப்படையில் திமுகவுக்கு முழு ஆதரவைத் தருவோம்.

கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்த நேரத்தில், ஸ்டாலினோடு சென்று அவரை பார்த்தபோது, அவர் கரங்களைப் பற் றிக்கொண்டு, உங்களுக்கு பக்கபலமாக இருந்ததைப் போல, தம்பி ஸ்டாலினுக்கும் பக்கபலமாக இருப்பேன் என்று நான் அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அந்த அடிப்படையில் திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க, மதிமுகவுக்கு இருக்கக்கூடிய ஆற்றலை, வலிமையை திமுகவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம்.

உதயசூரியன் சின்னம் ஏன்?

ஒரு கட்சி 12 தொகுதிகளுக்கு குறை யாமல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால்தான் அந்தக் கட் சிக்கு ஒரு சின்னம் ஒதுக்கப்படும். 12 தொகுதிகளுக்கும் குறைவாக போட்டியிட்டால் தனிச் சின்னம் கிடைக்காது. அதனால் 6 தொகுதிகளிலும் 6 விதமான சின்னங்களில் போட்டியிடும் நிலை ஏற்படலாம். இந்த நெருக்கடியான சூழ்நிலையைத் தவிர்க்கவும், 12 நாட் களே பிரச்சாரத்துக்கு இருக்கிறது என்பதாலும், நடைமுறை சாத்தியத்தை உத்தேசித்தும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம்.

முதல்முறையாக ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக முழு முயற்சி யோடு பாடுபடுவேன். மிகச்சிறந்த, தலைசிறந்த வேட்பாளர், தமிழக முதல் வராக வருவதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்ட வேட்பாளராக ஸ்டாலினைப் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது மதிமுக துணைப் பொதுச்செயலர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, அரசியல் ஆலோசனைக் குழு செயலர் புலவர் செவந்தியப்பன், ஆட்சிமன்றக் குழு செயலர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், உயர் நிலைக் குழு உறுப்பினர் அரியலூர் கு.சின்னப்பா, தேர்தல் பணிச் செயலர் ஆவடி இரா.அந்திரிதாஸ், திமுக பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலர்கள் இ.பெரியசாமி, க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x