Published : 04 Mar 2021 05:51 am

Updated : 04 Mar 2021 05:51 am

 

Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

மேஷம்: விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள்

மேஷம்: விஐபிகள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அரசாங்க காரியங்கள் எளிதில் முடியும். வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.மிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீகசொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பழைய வாகனத்தைமாற்றி புதியது வாங்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.கடகம்: மனதில் தைரியம் பிறக்கும். திட்டவட்டமாக, தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான மின் சாதனங்களை மாற்றுவீர்கள். வெளியூர் பயணத்துக்கு திட்டமிடுவீர்கள்.சிம்மம்: விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். தாயாருடன் மனத்தாங்கல் ஏற்படக் கூடும்.கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.துலாம்: பேச்சில் நிதானம் அவசியம். எதைச் செய்தாலும் பலமுறை தீர ஆலோசித்து முடிவெடுங்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பணவரவு உண்டு.விருச்சிகம்: அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். வெளிநாட்டில் இருப்பவர்களால் சில காரியங்கள் நிறை வேறும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.தனுசு: எத்தனை தடைகள் வந்தாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப சீர் செய்வீர்கள். ஆன்மிக பயணம் ஏற்படும்.மகரம்: பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சொத்துப் பிரச்சினை சுமூகமாக முடியும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகள் சாதகமாகும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பெற்றோருடன் இருந்துவந்த மனத்தாங்கல் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.மீனம்: வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வீடு பராமரிப்புச் செலவும் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படக் கூடும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x