Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர் அசத்தல் - 3-வது டி20-ல் ஆஸ்திரேலியா வெற்றி :

கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர் ஆகியோரின் சிறப்பான செயல்பட்டால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

வெலிங்டனில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கிளென் மேக்ஸ்வெல் 31 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், கேப்டன் ஆரோன் பின்ச் 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்களும் விளாசினர். ஜோஷ் பிலிப் 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

209 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியானது ஆஷ்டன் அகரின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.1 ஓவரில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 43, டேவன் கான்வே 38 ரன்கள் சேர்த்தனர்.

ஆஷ்டன் அகர் 4 ஓவர்களை வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஆஷ்டன் அகர். மேலும் உலக அரங்கில் டி20 ஆட்டத்தில் 6 விக்கெட் கைப்பற்றிய 5-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார் ஆஷ்டன் அகர். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங் களில் நியூஸிலாந்து வெற்றி பெற்றதால் அந்த அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

4-வது ஆட்டம் இதே மைதா னத்தில் நாளை (5-ம் தேதி) நடை பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x