Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

தங்கம் பவுனுக்கு ரூ.176 குறைந்தது :

சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்து வருவதால், சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.176 குறைந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.624 குறைந்துள்ளது.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பல்வேறு தொழில்கள் மீண்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இதனால், தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளது. இருப்பினும், சர்வதேச அளவுக்கு ஏற்றார்போல், தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. அதன்படி, கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.624 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் தங்கம்நேற்று பவுனுக்கு ரூ.176 குறைந்துரூ.34,112-க்கு விற்கப்பட்டது.22 கேரட் கொண்ட ஒரு கிராம்தங்கம் ரூ.4,264-க்கு விற்பனை ஆனது.

இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,286-க்குவிற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x