Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

கட்சித் தலைவர்கள் முகம் பார்த்து வாக்களித்த காலம் இப்போது இல்லை

கட்சித் தலைவர்கள் முகம் பார்த்து வாக்களித்த காலம் இப்போது இல்லை. முகம் தெரிந்தவர்கள் தினமும் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தால்தான் வாக்களிப்பர். அமைச்சரவையைக் கூட்டாமல் 110 விதியின் கீழ் நகைக் கடனை ரத்து செய்தது விதிமீறல். பட்ஜெட்டில் ஒரு ரூபாய்கூட ஒதுக்காமல் கடன்களை ரத்து செய்துள்ளது கோமாளித்தனம். பாஜகவைப் பொறுத்தவரை மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை விலை கொடுத்து வாங்கும் கட்சி.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

வன்னியர்களுக்கு 20 சதவீதம் கேட்டவர் எப்படி 10.5 சதவீதத்துக்கு ஒப்புக் கொண்டார். அப்படி என்றால் மீதம் உள்ள ஒன்பதரை சதவீத மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிற முடிவுக்கு ராமதாஸ் வந்துவிட்டாரா?. இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்கிற கேள்வி எழுகிறது. இது தேர்தல் நாடகமாகவே பார்க்கப்படுகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என ஆதாரப்பூர்வமாக அறிய முடியும்.

- விடுதலை சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மனுக்களை வாங்கிப் பெட்டியில் வைத்துப் பூட்டி அறிவாலயத்துக்குக் கொண்டு செல்கிறார். அவர் முதல்வர் ஆகப்போவதில்லை. எனவே, மனுக்கள் அடங்கிய பெட்டியைத் திறக்கப்போவதும் இல்லை. மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் முதல்வர் பழனிசாமி முதன்மையானவராகத் திகழ்கிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் காவல் அரணாக அதிமுக அரசு உள்ளது. எனவே அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெறுவோம்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x