Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

புதுவையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

ஹசீனா பேகம்.

புதுச்சேரி

வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட பெண்ணின் சடலம் நேற்றுமீட்கப்பட்டது. அவரது குடும்பத் துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம், குழந்தைகளின் கல்வி செலவைஅரசே ஏற்கும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை குறிப்பிட் டுள்ளார்.

புதுச்சேரி சண்முகாபுரம் அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனா பேகம் (35), மீன் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒருமகளும் உள்ளனர். ஹசீனா பேகம்தனது வீட்டின் அருகில் உள்ள ஓடை பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலையில் பலத்த மழை பொழிந்ததால் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் எடுத்து விடுவதற்காக முயன்றார். அப்போது மழை வெள் ளத்தில் சிக்கி இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டார்.

இதையறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்களும், மேட்டுப் பாளையம் போலீஸாரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் தேடும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம் ஹசீனா பேகத்தின்உடல் கனகன் ஏரியில் கரை ஒதுங்கியது. உடனே போலீஸார், தீயணைப்பு வீரர்கள் அவரது உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரூ.4 லட்சம் நிவாரணம்

இதற்கிடையே ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “புதுச்சேரி சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்த ஹசீனாபேகம் கனமழையால் வெள்ளவாரிவாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரதுகுடும்பத்திற்கு எனது ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது மறைவால் வாடும் கணவன், குழந்தை கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு கருணை தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படும். குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் ஹசீனா பேகத்தின் உடல் கனகன் ஏரியில் கரை ஒதுங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x