Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM

விஷ்ணு விஷால் ஜோடி

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எஃப்ஐஆர்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, ‘மோகன் தாஸ்’ படத்தில் நாயகனாக நடித்து, தயாரிக்க உள்ளார் விஷ்ணு விஷால். ‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். கலைமாமணி விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திரஜித் சுகுமாரனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. ‘நரகாசூரன்’ படத்தை தொடர்ந்து, இந்திரஜித் சுகுமாரன் ஒப்பந்தமாகியுள்ள அடுத்த தமிழ் படமாக ‘மோகன் தாஸ்’ அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x