Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

தூய்மைப் பணியாளர் மரணம் குறித்து விசாரணை அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்காமல் இருந்தால் விட்டு விடுவார்களா? தேசிய தூய்மைப் பணியாளர் நல வாரிய தலைவர் கேள்வி

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 6 மாதம் ஊதியம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர் மரணம் குறித்து விசாரணை செய்த தேசிய தூய்மைப் பணியாளர் வாரியத் தலைவர் ம.வெங்கடேசன், ‘அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்காமல் இருந்தால் விட்டு விடுவார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

மதுரை வண்டியூரைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர் வேல்முருகன் ஆட்சியர் அலு வலகத்தில் பிப்.18-ம் தேதி தூக் கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்காததால்அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து விசாரிப்பதற்காக தேசிய தூய்மைப் பணியாளர் நல வாரியத் தலைவர் ம.வெங்கடேசன் மதுரை வந்தார்.

அவர் வேல்முருகன் குடும்பத்தினர், மதுரை மாந கராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை செய் தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வெங்கடேசன் கூறியதாவது:

வேல்முருகன் மரணம் குறித்து குடும்பத்தினருக்கு சந்தேகம் உள்ளது. அவர் மரணத்தில் ஒப் பந்ததாரர் மீதும் புகார் கூறப் பட்டுள்ளது. கடந்த 6 மாதங் களாக அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் குடும் பத்தினர் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என மாநகராட்சி ஆணையரும், மாவட்ட வருவாய் அலுவலரும் தெரிவித்தனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தப் பணியாளர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட் டுமே பணியமர்த்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அது கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா?, ஒப்பந்தப் பணியாளர்களை நிரந் தரப்படுத்துவது ஆகியவை குறித்து ஆட்சியரிடம் பேசி நட வடிக்கை எடுக்கப்படும்.

அரசு அதிகாரிகளுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்காமல் இருந்திருந்தால் மிகப்பெரிய போராட்டம் நடந்திருக்கும். ஒப்பந்த ஊழியர் என்பதால் அதிகாரிகள் கூட அமைதியாக இருந்து விட் டதாகத் தோன்றுகிறது.

மற்ற மாநிலங்களில் இருப் பதைப்போல் தமிழகத்திலும் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் அமைப்பது குறித்து முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x