Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

டெங்கு தடுப்பு பணியாளர்களை வீட்டுக்குள் அனுமதிக்காவிட்டால் நடவடிக்கை: அதிகாரி எச்சரிக்கை

மதுரை மாநகராட்சி வார்டு பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து பொது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சில குடியிருப்புகளில் டெங்கு தடுப்பு பணியாளர்களை வீட்டுக்குள் அனு மதிக்க மறுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதற்கு அவர், டெங்கு தடுப்பு பணியாளர்களை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட வட்டார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்குமாறு அறி வுறுத் தினார். மேலும், சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்துமாறும், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினார்.

இந்த ஆய்வில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அர்ஜுன்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் (பொ) இஸ்மாயில் பாத்திமா, பூச்சியியல் வல்லுநர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x