Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் பிரச்சாரம்; முதல்வர் பழனிசாமி தனது 6-ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தில் 2-ம் நாளான இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் பிரச்சாரம்; முதல்வர் பழனிசாமி தனது 6-ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தில் 2-ம் நாளான இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 10 மணிக்கு ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து நாங்குநேரி தொகுதி, அம்பாசமுத்திரம் தொகுதி, ஆலங்குளம் தொகுதி, தென்காசி தொகுதியின் 2 இடங்கள் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

தேனி மாவட்டத்தில் ஸ்டாலின் பிரச்சாரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 4-ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தில் 2-ம் நாளான இன்று தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். காலை 8 மணிக்கு தேனி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோகிலாபுரம் விளக்கு பகுதியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தேனி தெற்கு மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பேரூர், கம்பம் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x