Published : 04 Feb 2021 03:13 AM
Last Updated : 04 Feb 2021 03:13 AM

இங்கிலாந்து அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் இந்திய அணி துணை கேப்டன் ரஹானே கருத்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 4 டெஸ்ட், ஐந்து டி 20ஆட்டங்கள், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரின்முதல் ஆட்டம் நாளை (பிப்.5)சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய பயிற்சிக்குப் பின்னர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்க்ய ரஹானே கூறியதாவது:

தற்போதைக்கு நாங்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும், சென்னையில் நடைபெற உள்ள முதல் டெஸ்டிலுமே கவனம் செலுத்துகிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் 3-4 மாதங்கள் உள்ளன.எங்களைப் பொறுத்தவரை ஒரு சமயத்தில் ஒரு ஆட்டத்தை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.

இங்கிலாந்து தொடருக்காக வித்தியாசமாக தயாராகவில்லை. நாங்கள் சொந்த நாட்டில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடுகிறோம். ஆகவே, எனது சொந்த விளையாட்டை தனிப்பட்ட முறையில் ஆதரிப்பது, அணிக்கு என்ன தேவை என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விளையாடுவேன்.

ஆஸ்திரேலியா தொடரில்நாங்கள் எங்கள் வெற்றியை அனுபவித்தோம். நாங்கள் இங்கிலாந்து அணியை மதிக்கிறோம், நாங்கள்அவர்களை இலகுவாக எடுத்துக்கொள்ள மாட்டோம். சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

இவ்வாறு ரஹானே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x