Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ 2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணம் நாளை தொடக்கம் திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சாரத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்குகிறார்.

இதுகுறித்து திமுக தலைமை நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் நாளை (பிப்.4) தொடங்குகிறார். 4-ம் தேதி பகல் 1 மணிக்கு, ராமநாதபுரம் மாவட்டம், தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி, நான்கு வழிச்சாலை, பரமக்குடியில் பிரச்சாரம் செய்கிறார். 5-ம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கலைஞர் திடல், எட்டையாபுரம் சாலை, கோவில்பட்டியிலும், பகல்1 மணிக்கு, தூத்துக்குடி தெற்குமாவட்டம், நட்டாச்சி ஊராட்சி, பட்டாண்டிவிளை, வைகுண்டத்திலும் பிரச்சாரம் செய்கிறார்.

6-ம் தேதி காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானம், நாகர்கோவில் நகரிலும், அன்று பகல் 1 மணிக்கு திருநெல்வேலி கிழக்கு மற்றும் மத்திய மாவட்டம், வீரவநல்லூர் பேரூராட்சி, நெல்லை - அம்பாசமுத்திரம் நெடுஞ்சாலை, அம்பாசமுத்திரத்திலும்,

7-ம் தேதி காலை 8 மணிக்கு தென்காசி வடக்கு, தெற்கு மாவட்டம், பேரறிஞர் அண்ணா திடல்,சுரண்டை சாலை, சங்கரன்கோவிலிலும், பகல் 1 மணிக்கு விருதுநகர்வடக்கு, தெற்கு மாவட்டம், பட்டம்புதூர் ஊராட்சி, விருதுநகரிலும், 8-ம் தேதி பகல் 1 மணிக்கு சிவகங்கை மாவட்டம், கே.வைரம்பட்டிஊராட்சி, காரைக்குடி - திருப்பத்தூர் சாலை, திருப்பத்தூரிலும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.

இவ்வாறு திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x