Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்யப்படும் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் சிலை திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஜெயலலிதா பிறந்த பிப்.24-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழா வாக கொண்டாடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள் ளார். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள உயர்கல்வி மன்ற வளாகம், ‘ஜெயலலிதா வளாகம்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், அந்த வளாகத்தில் ஜெய லலிதாவின் முழுஉருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையையும் வளாக பெயர் பலகையையும் முதல்வர் பழனிசாமி நேற்று திறந்துவைத் தார். அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ‘ட்ரோன்’ மூலம் சிலை திறக்கப்பட் டது. அப்போது, உயரே பறந்து வந்த ட்ரோன்கள், ஜெயலலிதா சிலை மீது பூக்களை தூவின.

சிலையை திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதைச் செய்தாலும் அதை நேர்த்தியுடனும், அழகுடனும் மிகச்சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அறிவாலும் ஆற்றலாலும் வென்று காட்டும் திறமை படைத்தவர். அடுத்தவர் நலனுக்காக சிந்தித்து அதற் கான திட்டங்களை தீட்டி செயல் படுத்தியவர்.

அவரது வழியில் தற்போதைய அரசு பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு என்றென்றும் அரணாக தொடர்ந்து நின்று காத்து வருகிறது. நாட்டிலேயே முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு தமிழகத்தில் உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. காவலன் செயலி, மகளிர் உதவி எண் 181, குழந்தைகளுக் கான உதவி எண் 1098 போன் றவை மூலம் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றங்களுக் கான தண்டனையை மேலும் கடுமை யாக்க, மத்திய அரசின் அனுமதி பெற்று இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர தமிழக அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாணவ சமுதாயத்தையும், இளைஞர்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல அரசு அனைத்துவித நடவடிக்கை களையும் எடுத்துவருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 10 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 7 அரசு கலை அறி வியல் கல்லூரிகள், 3 பாலி டெக்னிக்குகள் தொடங்கப்பட்டுள் ளன. 6 மாவட்டங்களில் புதிய சட்டக் கல்லூரிகள், 11 மாவட்டங்களில் ரூ.3,995 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் நோக்கில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கப் பட்டுள்ளது.

விளையாட்டு வீரர் களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் பட்டு, பொதுத்துறை நிறுவனங் களில் சிறந்த வீரர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2011-ல் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் 32 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

11,700 பேர் பணி நியமனம்

தமிழகத்தில் வேலைநாடும் இளைஞர்கள், வேலையளிக்கும் தனியார் நிறுவனங்களை இணைக்க, பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்ட தமிழ்நாடு தனி யார் துறை வேலை இணையம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை 11,700 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எண்ணற்ற திட்டங்களை செயல் படுத்திய, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்க்கும் அரசு இந்த அரசு. அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண் டாடப்படும்.

இந்த வளாகத்தில் நிறுவப் பட்டுள்ள இந்த ஜெயலலிதாவின் சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘ நாட்டின் மற்ற மாநிலங்களால் பாராட்டப்படும் முதல்வராக ஜெயலலிதா விளங்கினார். தொலைநோக்கு திட்டம்-2023 என்ற ஆவணத்தை அவர் வெளி யிட்டார். திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையிலும், எதிர் கால சந்ததியினரும் முழுப் பயனும் பெறும் வகையில் பார்த்து பார்த்து அர்ப்பணித்தார். மாநில சொந்த நிதியாதாரத்தில் இருந்து, மக்களின் சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு 52 சதவீதம் ஒதுக்கினார். குறிப்பாக கல்வித்துறைக்கு சுதந்திரத்துக்குப் பின் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவாக, மாநில சொந்த நிதியாதாரம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி என்றால் அதில் ரூ.35 ஆயிரம் கோடியை கல்வித் துறைக்காக ஒதுக்கினார். பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, மாணவர்களுக்கு 16 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா வழியை பின்பற்றி திட்டங்களை செயல்படுத்தியதால், அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால், அமைச்சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x