Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

ஓசூரில் ரூ.12 கோடி நகைகள் கொள்ளை வழக்கு கொள்ளையர்களை பெங்களூரு அழைத்துச் சென்று விசாரணை

ஓசூரில் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான 7 பேரை பெங்களூருவுக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 22-ம் தேதி வட மாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, துப்பாக்கி முனையில் நிதி நிறுவன ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த ரூ.12 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், தெலங்கானாவில் 7 பேரை கைது செய்தனர்.

அவர்களை ஓசூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்திய போலீஸார், 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் 7 பேரையும் போலீஸார் நேற்று காலை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கொள்ளையர்கள் தங்கிய இடம், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று மாலை அவர்கள் 7 பேரும் மீண்டும் ஓசூருக்கு அழைத்து வரப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x