Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

வாழ்நாள் முழுக்க உணவு அளித்தால் மகிழ்ச்சி: பத்மஸ்ரீ விருது பெறும் கனகராஜ் வேண்டுகோள்

ஹைதராபாத்: மத்திய அரசு நேற்று முன்தினம் பத்ம விருதுகளை அறிவித்தது. இதில் தெலங்கானாவுக்கு ஒரே ஒரு விருது மட்டுமே கிடைத்துள்ளது.

தெலங்கானா மாநிலம், குமரம்பீம் அசிஃபாபாத் மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த கனகராஜுக்கு (70) பத்ம  விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், மயில் இறகுகளை கட்டிக்கொண்டு ஆடும் குஸ்ஸாடி எனும் பழங்குடியின நடனத்தில் புகழ் பெற்றவர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்திரா காந்தி, அப்துல் கலாம் உள்ளிட்ட பிரபலங்கள் இவரது நடனத்தை பாராட்டியுள்ளனர். கடந்த 1981-ம் ஆண்டு டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் குஸ்ஸாடி நடனம் ஆடியுள்ளார். நூற்றுக்கணக்கான குஸ்ஸாடி நடன கலைஞர்களை உருவாக்கி உள்ளார். பத்ம  விருது கிடைத்தது குறித்து கனகராஜ் கூறும்போது, " இந்த விருது எனக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பழங்குடியின மாணவர் தங்கும் விடுதியில் சமையல்காரராக கஷ்டப்படுகிறேன். இந்த விருதைவிட வாழ்நாள் முழுவதும் தங்க இடமும், உணவும் வழங்கினால் மகிழ்ச்சி அடைவேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x