Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டுநடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றமாணவ, மாணவிகளுக்கு மாநகராட்சிஆணையர் கோ.பிரகாஷ் நேற்று பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25-ம் தேதிதேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ‘வாக்காளர்களை அதிகாரம் மிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவது’ என்ற குறிக்கோள்களுடன் 11-வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில் 11-வது தேசிய வாக்காளர் தினவிழா ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கில் நேற்றுநடைபெற்றது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்றுஒவ்வொரு வாக்காளரும் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

பின்னர், முதல் முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தேர்தல் களப்பணிகள் மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மேலங்கி மற்றும் உதவிப் பொருட்களையும், தேர்தல் பணிகளில் சிறப்பாகபணிபுரிந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களைப் பாராட்டி விருதுகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்டவருவாய் அலுவலர் (தேர்தல்) பி.ஃபெர்மிவித்யா, மண்டல அலுவலர் பி.எம்.செந்தில் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x