Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

கலைவாணர் அரங்கில் ஏற்பாடுகள் தீவிரம் தமிழக சட்டப்பேரவை பிப்.2-ம் தேதி கூடுகிறது ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், பிப்.2-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

இதுகுறித்து சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அரசியலமைப்பு சட்டப் பிரிவின் கீழ் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தை பிப்ரவரி 2-ம் தேதி காலை 11 மணிக்கு ஆளுநர் கூட்டி யுள்ளார். சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட் டத்தில் உள்ள கலைவாணர் அரங் கின் 3-வது தளத்தில் பலவகை கூட்ட அரங்கில் பேரவை கூட்டப் பட்டுள்ளது. அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை கூட்ட அரங் கில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த இயலவில்லை. அதனால், கலைவாணர் அரங்கின் 3-ம் தளத் தில் சட்டப்பேரவை அரங்கம் போன்றே பிரத்யேகமாக அரங்கம் அமைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட் கள் பேரவைக் கூட்டம் நடத்தப்பட் டது. தற்போது அதே அரங்கில் கூட்டத் தொடரை நடத்த சட்டப் பேரவைச் செயலகம் முடி வெடுத்து, அதன்படி கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பிப்ரவரி 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப் பார். அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசிப்பார். அத்துடன் பேரவைக் கூட்டம் முடிக்கப்படும். பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்து வது என்பது குறித்து முடிவு செய்யும்.

ஆளுநர் உரை மீதான விவாதம் 3 நாட்கள் நடத்தப்படும் என தெரி கிறது. இறுதிநாளில் விவாதத் துக்கு முதல்வர் பழனிசாமி பதி லளித்து உரையாற்றுவார். பேர வைத் தேர்தல் நெருங்குவதால் ஆளுநர் உரையில் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறும் என கூறப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்

பட்ஜெட் கூட்டத் தொடர் பின்னர் தொடங்கும். பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால் தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும். தேர்தல் முடிந்த பிறகு புதிதாக பொறுப்பேற்கும் அரசு முழுமையான பட்ஜெட்டை தாக் கல் செய்யும்.

தேர்தல் நேரம் என்பதால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, முதல்வர், அமைச்சர் கள் மீது ஆளுநரிடம் அளித்த ஊழல் புகார்கள் மீதான நட வடிக்கை, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்க்கட்சியான திமுக பேரவையில் எழுப்பும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x