Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

பிப்.15-ல் பல்கலைக்கழகங்கள் அளவிலான முன்னாள் மாணவர்களை இணைக்கும் நிகழ்ச்சி

அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியசுற்றறிக்கை:

பல்கலைக்கழக அளவில் செயல்படும் முன்னாள் மாணவர்கள் அமைப்பு (Alumni cell) மூலம் கல்வி நிறுவனத்துக்கு தேவையான பொருளாதார உதவிகளையும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உதவிகளையும் செய்ய முடியும். நாட்டில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார அளவில் முன்னாள் மாணவர்களின் உதவிகள் தேவைப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் பயின்ற வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய மாணவர்களை இணைத்து ‘Alumni Connect' என்ற நிகழ்ச்சியை பல்கலைக்கழக அளவில் நடத்தயுஜிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி, இணையவழி நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 15-ம் தேதி நடக்கவுள்ளது.

எனவே, தங்களின் பல்கலைக்கழகங்களில் பயின்ற இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் விடுபட்ட தகவல்களை முன்னாள் மாணவர்கள் அமைப்பில் சேர்க்கவேண்டும். முன்னாள் மாணவர்களை தனித்தனியாகவும் குழுவாகவும் வெபினார் நிகழ்ச்சியில் ஒருங்கிணைக்க வேண்டும்.

அதேபோல், பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.

முன்னாள் மாணவர்களை இணைக்கும் நிகழ்ச்சியில் சேர விரும்பும் நபர்களை https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfhgWZ6UHoxXCEUIzuhL5rWDUhNs94Zmrrl8XI2-AZWSy9amA/viewform என்ற இணையவழி இணைப்பு முகவரி மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x