Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

மலபார் குழும தலைவர் தங்க இறக்குமதி வரியை குறைக்க வலியுறுத்தல்

சென்னை

தங்கம் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரியை 7 சதவீதமாக குறைக்குமாறு மலபார் குழுமத் தலைவர் எம்.பி.அகமது மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் தங்கம் கடத்தலும் வரி ஏய்ப்பும் நிலவுகின்றன. வரியை குறைத்தால்தான் இவற்றை தடுக்கமுடியும். ஜிஎஸ்டி உள்ளிட்ட தங்கம் மீதான வரிச்சுமை 15.5 சதவீதமாக இருந்தாலும், சுரங்கஉரிமைகளுக்கான ராயல்டியை சேர்த்தால் மொத்த வரியானது 20 சதவீதமாக ஆகிவிடுகிறது.

தங்கம், வைர வர்த்தகம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீதம், மொத்த ஏற்றுமதியில் 14 சதவீதமாக உள்ளது. 60 லட்சம் பேர் இத்தொழிலில் உள்ளனர். வரி குறைப்பால் சட்ட விரோத தங்க வர்த்தகம் முற்றிலும் அழிந்து போய்விடும். தங்கம் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி,சுங்க வரியை 7 சதவீதமாக குறைக்க வேண்டும்.

ஜிஎஸ்டி, பிற வரிகள் தொடர்பான விலை விவரங்களை சுட்டிக் காட்ட வேண்டும் என்ற நிபந்தனை ஏதுமின்றி ஆபரண விற்பனையில் அதிகபட்ச சில்லறை விலை (MRP) முறையை அறிமுகம் செய்ய அரசு அதிகாரிகள், ஆபரண தயாரிப்பாளர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x