Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

அதிமுக சார்பில் எம்ஜிஆர்பிறந்த நாள் கொண்டாட்டம்

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாள் விழா கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டச் செயலர் அம்மன் கே.அர்ஜுனன் எம்எல்ஏ தலைமையில் 500 -க்கும் மேற்பட்ட அதிமுகவினர், எம்ஜிஆர் உருவப் படத்துடன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்துடன் ஊர்வலம் சென்றனர். அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் உப்பிலிபாளையம் அவிநாசி சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x