Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

மாருதி சுஸுகி அரீனா கார்களைவாங்குவோருக்கு ரூ.44 ஆயிரம் தள்ளுபடி சிறப்பு சலுகை இன்று நிறைவு

மாருதி சுஸுகி அரீனா கார் வாங்குவோருக்கு ரூ.44 ஆயிரம்வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை இன்று நிறைவடைகிறது.

இதுதொடர்பாக மாருதி சுஸுகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விடுபட்டு சந்தைகள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றன. ஆனாலும், பொதுப் போக்குவரத்தைவிட சொந்த வாகனங்களில் செல்வதையே மக்கள் விரும்புகின்றனர். இதன் காரணமாக, கார் வாங்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், ஜனவரியில் கார்கள் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார் வாங்க விரும்புவோருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில், மாருதி சுஸுகி நிறுவனம் ‘பிரைஸ் புரொடெக்‌ஷன்’ (விலை பாதுகாப்பு) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மாருதி சுஸுகி அரீனா வகை கார்களில் அதன் மாடலுக்கு ஏற்ப ரூ.27,000 முதல் ரூ.44,000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த சிறப்பு சலுகை இன்றுடன் (ஜனவரி 17) நிறைவடைகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாருதி சுஸுகி அரீனா ஷோரூம்களில் இந்த சலுகையைப் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x