Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

கோயம்பேடு சந்தையில் முட்டைகோஸ், பீட்ரூட் விலை வீழ்ச்சி

முட்டைக்கோஸ், பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைந்திருப்பது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, “கொடைக்கானல், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் முட்டைகோஸ் பயிரிடப்படுகிறது. தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஈரோடு மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், திண்டுக்கல் ஆகிய இடங்களில் பீட்ரூட் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக சந்தைக்கு வரத்தும் அதிகரித்து, அவற்றின் விலை குறைந்துள்ளது. அடுத்த இரு மாதங்களுக்கு இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x