Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும்

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.ரிஷபம்: குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.மிதுனம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறை வேற்றுவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.கடகம்: புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டகால பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.சிம்மம்: சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். கடன் தொகை வசூலாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும்.துலாம்: அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு பரிந்து பேசப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.விருச்சிகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.தனுசு: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.கும்பம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும்.மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x