Published : 05 Jan 2021 08:21 AM
Last Updated : 05 Jan 2021 08:21 AM

9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

‘‘ஈரப்பதம் உள்ள கிழக்கு திசைகாற்று வலுப்பெற்று இருப்பது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும்,

6-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி, நீலகிரி,கோவை, புதுச்சேரி, காரைக்கால்ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும்,

7-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், 8-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x