Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM

மெரினா கடற்கரை வழக்கில் உத்தரவு பிறப்பித்தது திருப்தி மாறுதலாகி செல்லும் நீதிபதி வினீத் கோத்தாரி பெருமிதம்

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் வழக்கை விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது எனக்கு பரிபூரண திருப்தியளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், இரண்டாவது மூத்தநீதிபதியாகவும் பதவி வகித்து வரும்வினீத் கோத்தாரி, குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உயர்நீதிமன்றம் சார்பில் பிரிவுபச்சார விழா காணொலி காட்சி மூலமாக நேற்று நடந்தது.

இதில் வினீத் கோத்தாரி பேசும்போது, “பாரம்பரியமான சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், மூத்த நீதிபதியாகவும் பணியாற்றியது பெருமையளிக்கிறது. ஆனால் இங்கிருந்து என்னை குஜராத்துக்கு மாற்றியிருப்பது கொஞ்சம் வேதனை அளிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மிகவும் திறமையானவர்கள். இங்குபணியாற்றிய ஒவ்வொரு நாளும் சிறந்த அனுபவமாக இருந்தது. சிறு கசப்புணர்வுகூட எழவில்லை.

கரோனா பரவல் காலகட்டத்தில் வழக்குகளை காணொலி வாயிலாக விசாரித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது எனக்கு பரிபூரண திருப்தியளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x