Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM

மருத்துவ உளவியலில் எம்.ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவ உளவியலில் எம்.ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் 2020-2021 ஆண்டுக்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்துக்காக மாணவர் சேர்க்கை வரும் ஜன.12-ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்படிவம் மற்றும் ஏனைய விவரங்கள் www.tnhealth.tn.gov.in and www.tnmedicalselection.orgஎன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சான்றுகளை செயலாளர், தேர்வுக்குழு மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010 என்று முகவரியிட்டு ஜன.5-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x