Published : 30 Dec 2020 03:16 am

Updated : 30 Dec 2020 03:16 am

 

Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM

என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்

சென்னை

கட்சி தொடங்கும் முடிவை கைவிட் டார் நடிகர் ரஜினிகாந்த். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித் ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள் வதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

நாளை (டிச.31) கட்சி தொடங்கு வதை அறிவிப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென நேற்று, தான் கட்சித் தொடங்கப்போவதில்லை என்று ட்விட்டரில் ரஜினிகாந்த் பதிவிட்டார். பின்னர் அவரது நிலைப்பாட்டை விளக்கி 3 பக்க அறிக்கையையும் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:


என்னை வாழவைக்கும் தெய் வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி "அண் ணாத்த" படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென் றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிந்து, மிகவும் எச்சரிக்கையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி, நான் உட்பட அனை வருக்கும் பரிசோதனை நடத்தப் பட்டது. எனக்கு கரோனா நெகட் டிவ் வந்தது. ஆனாலும் ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு இருந்தது. அவ்வாறு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாகப் பாதிக்கும். எனவே, என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் 3 நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

என் உடல்நிலை கருதி தயா ரிப்பாளர் கலாநிதிமாறன், மீத முள்ள படப்பிடிப்பை தள்ளிவைத் தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என் னுடைய உடல்நிலைதான். இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க் கிறேன்.

நான் கட்சி தொடங்கிய பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங் கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனு பவம் வாய்ந்த பலரும் மறுக்க மாட்டார்கள்.

நான் மக்களைச் சந்தித்து கூட் டங்களை கூட்டி, பிரச்சாரத்துக்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் 3 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது.

இப்போது இந்த கரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண் டாவது அலையாக வந்து கொண் டிருக்கிறது. தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கரோனா காலத்தில் மக்களைச் சந்தித்து, பிரச்சாரத்தின்போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டக் கூடும். அவ்வாறு ஏற்பட்டால் என்னை நம்பி என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நான்கு பேர் நான்கு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. எனவே, நான் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி தொடங்குவேன் என்று எதிர்பார்த் துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக் கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள். மக்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் கரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். அது வீண் போகாது. அந்தப் புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்.

கடந்த நவம்பர் 30-ம் தேதி நான் உங்களை சந்தித்தபோது, நீங்கள் எல்லோரும் ஒருமனதாக "உங்கள் உடல் நலன்தான் எங் களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே" என்று சொன்ன வார்த் தைகள் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நீங்கள் என்மேல் வைத் திருக்கும் அன்புக்கும், பாசத்துக் கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும்போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ் வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள், அதுதான் எங் களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய தமிழருவி மணியனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்கூட வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜூன மூர்த்திக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும் வெளிப்படைத் தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ரஜினி காந்த் கூறியுள்ளார். கட்சி தொடங்கப் போவதில்லை என்ற ரஜினிகாந்த் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இருப் பினும், தலைவர் உடல்நலனே தங்களுக்கு முக்கியம் என்று ஆறுதல் அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x