Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் விழா ராகுல் காந்தி பங்கேற்காததால் பாஜக விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் 136-வதுநிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்ற தால் ராகுல் இவ்விழாவில் பங் கேற்கவில்லை. இதுகுறித்து பாஜக விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 136-வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். ராகுல் காந்தி நேற்று முன்தினம் திடீரென வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால் கட்சியின் நிறுவன நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. பிரியங்கா மட்டுமே கலந்து கொண்டார்.

ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நேற்று முன்தினம் தெரிவித்தார். எந்த நாட்டுக்கு ராகுல் சென்றுள்ளார் என்று அவர் கூறவில்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் இத்தாலியில் உள்ளார். ராகுல் காந்தி தனது தாய்வழி பாட்டியை சந்திக்க இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த பிரியங்காவிடம் ராகுல் பயணம் பற்றி கேட்கப்பட்டபோது அவர் பதில் சொல்வதைத் தவிர்த்தார்.

இதனிடையே, ராகுலின் பயணம் குறித்து மத்திய பிரதேசமுதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் 136-வது ஆண்டு நிறுவன நாள் விழாவை கொண்டாடுகிறது. ஆனால், ராகுல் காந்தியை காண வில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

பாட்டியை பார்க்கச் சென்றார்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கே.சி. வேணுகோபால் கூறும்போது, "ராகுல் காந்தி தனது பாட்டியை பார்க்கச் சென்றுள்ளார். இது தவறா? தனிப்பட்ட முறையில் பயணம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. இதை வைத்து பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்கிறது. ராகுலை குறிவைத்து பாஜக தாக்குகின்றது’’ என்றார்.

இதனிடையே, கட்சியின் நிறுவன நாளை முன்னிட்டு ராகுல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நாட்டின் நலனுக்காக பாடுபட காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது. கட்சியின் நிறுவன நாளில் உண்மைக்கும் சமத்துவத்துக்கும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்ற மீண்டும் உறுதியேற்போம். ஜெய் ஹிந்த்’’ என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி நேற்று முன்தினம் திடீரென வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதால் கட்சியின் நிறுவன நாள் விழாவில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியாவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x