Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் விவசாயிகள் முன்பு தலைவணங்கி வேண்டுகிறேன் என பிரதமர் மோடி உருக்கம்

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம். விவசாயிகள் முன்பாக தலைவணங்கி, கைகூப்பி வேண்டுகிறேன் என பிரதமர் மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் தொடர் பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விவசாயிகளுடன் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சுமார் 35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,600 கோடி காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி, ஜபல்பூரில் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இதில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களால் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் நிறுத்தப்படும் என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதை விவசாயிகள் நம்ப வேண்டாம். சுவாமிநாதன் பரிந்துரைகளை அமல் படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். பழைய சந்தை நடைமுறையும் தொட ரும் என்று உறுதி அளிக்கிறேன்.

கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசு பதவியேற்றது. அதற்கு முந்தைய ஆட்சியில் விவசாயி களிடம் இருந்து 1.5 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டன. பாஜக அரசு பதவியேற்ற பிறகு 112 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

முந்தைய அரசு பருப்பு சாகுபடி விவசாயிகளுக்கு ரூ.650 கோடி மட்டுமே வழங்கியது. நாங்கள் பருப்பு விவசாயி களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வழங்கியுள் ளோம். எதிர்க்கட்சிகள் விவசாயிகளிடம் வதந்திகளை பரப்பி, அவர்களை தவறாக வழிநடத்தி வருகின்றன.

எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை

எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு அந்த அறிக்கை யில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகளை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம்.

மத்திய பிரதேச தேர்தலின்போது விவ சாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப் படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித் தது. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவி யேற்ற பிறகு கடன் தள்ளுபடியால் எந்த விவசாயியும் பலன் அடையவில்லை. ராஜஸ்தான் மாநிலத்திலும் விவசாயி களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை கடன் தள்ளுபடிக்காக ராஜஸ்தான் விவசாயிகள் காத்திருக்கின் றனர். அப்பாவி விவசாயிகளை எதிர்க் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போட்டு, முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

புதிய வேளாண் சட்டங்கள் ஒரேநாள் இரவில் அமல் செய்யப்படவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆலோசனைகளை நடத்தி வந்தன. விவசாய சங்கங்கள், வேளாண் வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகள் கேட் டறியப்பட்டன. அவற்றின் அடிப்படையி லேயே புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. புதிய சட்டங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், இதே சீர்திருத்தங்களை தங்களது தேர்தல் அறிக்கைகளில் வெளியிட்டுள்ளன.

கடந்த 70 ஆண்டுகளாக விவசாயி கள் தங்களது வேளாண் விளைபொருட் களை சந்தையில் மட்டுமே விற்பனை செய்து வந்தனர். புதிய சட்டங்கள் மூலம் சந்தையை தாண்டி பல்வேறு தளங் களில் விளைபொருட்களை விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த சாகுபடி என்பது புதிய திட்டம் கிடையாது. இந்த திட்டம் பல மாநி லங்களில் வெற்றிகரமாக அமல்படுத் தப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில் சட்டத்தில் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வியாபாரிகளால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. விவசாயிகள் விரும்பினால் மட்டுமே ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும்.

கடந்த பல ஆண்டுகளாகவே வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு வருகின்றன. தேன் உற்பத்தி, கால்நடை, மீன் வளம் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளன.

விவசாயிகளை வாழவிடுங்கள்

புதிய வேளாண் சட்டங்களால் மோடிக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் நினைக் கின்றன. எனக்கு எதுவுமே தேவை யில்லை. எல்லா பெயர், புகழையும் எதிர்க்கட்சிகளே எடுத்துக் கொள்ளட்டும். விவசாயிகளை மட்டும் வாழவிடுங்கள். வதந்திகள், பொய்களை பரப்பி விவ சாயிகளை உங்கள் வலையில் வீழ்த்த வேண்டாம்.

புதிய வேளாண் சட்டங்களில் என் னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று எதிர்க்கட்சிகளிடம் அரசு தரப்பில் பல முறை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை. புதிய சட்டங்களால் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் என்று எதிர்க் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதை நம்பி ஏமாற வேண்டாம்.

விவசாயிகள் முன்பாக தலை வணங்கி, கைகூப்பி வேண்டுகிறேன். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விவ சாயிகளுடன் ஆலோசிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகளுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதற்கு விளக்கம் அளிக்கப்படும். மத்திய அரசை பொறுத்தவரை விவசாயிகளின் நல னுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம். வரும் 25-ம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். அந்த நாளில் விவசாயிகளுடன் மீண்டும் பேசுவேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x