Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

காங். தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று தனது 74-வது அகவையை எட்டினார். இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், “சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் ஆசியுடன் நீங்கள் ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பல்வேறு பாஜக மூத்த தலைவர்களும் சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக, சோனியா காந்தியின் பிறந்த நாள், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால், டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என காங்கிரஸ் தொண்டர்களுக்கு அண்மையில் அவர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, காங்கிரஸ் அலுவலகங்களில் நேற்று கொண்டாட்டங்கள் ஏதும் நடைபெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x