Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது ஜனவரியில் கட்சி தொடக்கம் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நிச்சயம் ரஜினி அறிவிப்பு

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தின் தலையெ ழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது என்றும் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நிச்சயம் நிகழும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கடந்த 2017 டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். ‘நான் அரசிய லுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி தொடங்கி, சட்டப்பேர வைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன்’ என்று தெரிவித்தார். அதையடுத்து ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான வேலைகள் மும்முர மாக நடந்தன. ரஜினி மக்கள் மன்றத்துக்கு புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். அவ்வப்போது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார். இருந்தாலும் அவர் புதிய கட்சி தொடங்குவது தாமதமா கிக் கொண்டே வந்தது. அவர் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்று தொடர்ந்து பல விவாதங்கள் நடந்து வந்தன.

சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் பெயரில் ஒரு அறிக்கை, சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ரஜினியின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் இடம் பெற்றிருந்தன. அது தனது அறிக்கை அல்ல என்று மறுத்த ரஜினி, ஆனால் அதில் கூறப்பட்டுள்ள தனது உடல்நிலை குறித்த விஷயங்கள் உண்மை என விளக்கம் அளித்தார். அதனால், ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின.

கடந்த 30-ம் தேதி சென்னையில் மன்ற மாவட்டச் செய லாளர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, ‘எனது அரசியல் நிலைப்பாடு குறித்து எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு விரைவாக அறிவிப்பேன்’ என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், கட்சி தொடங்குவதை ரஜினி நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘ஜனவரியில் கட்சி தொடக்கம். அதுகுறித்து வரும் 31-ம் தேதி அறி விக்கப்படும். மாத்துவோம்.. எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல் லேன்னா எப்பவும் இல்லை. வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி, மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும்’ என்று பதிவிட்டார்.

ரஜினியின் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்த அவரது ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்றத்தினரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டு முன்பு குவிந்த ரசிகர்கள் அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி ஆரவாரம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தனது இல்லத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அனைவருக்கும் வணக்கம். தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன்பாக நான் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொல்லியிருந்தேன். பின்னர் லீலா பேலஸ் ஓட்டலில் பேட்டி அளித்தபோது, ‘நாட்டு மக்களிடம் எழுச்சி வர வேண்டும். அதன்பிறகுதான் கட்சி தொடங்குவேன்’ என்று தெரிவித்தேன். அதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போகலாம் என்றிருந்தேன். ஆனால், கரோனாவால் நான் அதைச் செய்ய முடியவில்லை.

நான் கொடுத்த வாக்கில் இருந்து ஒருபோதும் மாறமாட் டேன். அரசியல் மாற்றம் காலத்தின் கட்டாயம். அரசியல் மாற்றம் நாட்டுக்கு தேவை. அது வந்தே ஆகணும். இப்போ இல்லைன்னா எப்பவுமே கிடையாது. மாத்தனும்.. எல்லாத் தையும் மாத்தனும். நான் ஒரு சின்னக் கருவிதான். நான் அர சியலுக்கு வருகிறேன். மாற்றம் நடக்கனும். நான் வெற்றி பெற் றால் அது மக்களுடைய வெற்றிதான். தோல்வியடைந்தாலும் அது மக்களுடைய தோல்விதான். நாட்டு மக்கள் எல்லோரும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களை இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

‘அண்ணாத்த’ படத்தின் ஷுட்டிங் இன்னும் 40 சதவீதம் உள்ளது. அதை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை. கட்சி தொடங்குவது என்பது ராட்சத வேலை. அந்த வேலையைத் தொடங்கிவிட்டோம். அரசியலுக்கு வருவேன் என்று நான் தெரிவித்த காலத்தில் இருந்து, எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து எனக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தமிழருவி மணியனை எனது கட்சியின் மேற்பார்வையாளராக நியமித்துள்ளேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த் தியை நியமிக்கிறேன். நான் செல்லும் அரசியல் பாதையில் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் தலை யெழுத்து இருக்கும். அதுபோல நாட் டுக்கும் தலையெழுத்து இருக்கும். தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாளும் வந்துவிட் டது. நிச்சயமாக அது நடக்கும். அர சியல் மாற்றம், ஆட்சி மாற்றமும் நிகழும். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

‘தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் சந்தோஷப்படுவேன்’

தமிழக மக்களின் பிரார்த்தனையால்தான் உயிர் பிழைத்தேன். அந்த மக்களுக்காக என் உயிரே போனாலும்கூட அதற்காக சந்தோஷப்படுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய ரஜினிகாந்த், இதுபற்றி கூறியதாவது:

எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விட்டுத்தான் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள். அதுபோலத்தான் எனக்கும் செய்தார்கள். ஆனால், கரோனா வைரஸ் தொற்று வராமல் இருக்க வேண்டும் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். இந்நிலையில், நான் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்வது மருத்துவ ரீதியாக நிச்சயம் ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நான் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக மக்களின் பிரார்த்தனையால்தான் உயிர் பிழைத்தேன். அந்த மக்களுக்காக என் உயிரே போனால்கூட என்னைப் போல சந்தோஷப்படுபவர் யாரும் இருக்க முடியாது. இவ்வாறு ரஜினி கூறினார்.

இதனிடையே 'மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்', 'இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல' என ரஜினி தெரிவித்திருந்த கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x