Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

கிறிஸ்துமஸை முன்னிட்டு தேவாலயங்களில் நற்கருணை வழங்க சிறப்பு அனுமதி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்

கிறிஸ்துமஸை முன்னிட்டு தேவாலயங்களில் பக்தர்களுக்கு தனித்தனி குவளைகளில் நற்கருணை வழங்க சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் படிப்படியாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டன. குறிப்பாக வழிபாட்டுத் தலங்களில் பிரசாதம் வழங்குதல் போன்றவற்றில் பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் 25-ம்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சிறப்பு அனுமதிகளை தமிழக அரசு தற்போது வழங்கியுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆக.31-ம் தேதி வெளியிடப்பட்ட வருவாய்த் துறையின், வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வழிபாட்டுத் தலங்களில் குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்களில், புனித நீர் தெளித்தல் மற்றும் பக்தர்கள் இடையிலான நேரடி தொடர்புகளைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மாதத்தில்கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது நற்கருணை எனப்படும் புனித அப்பம், திராட்சை ரசம்ஆகியவை வழங்குவது மிக முக்கியமான நிகழ்வாகும். எனவே, இதை அனுமதிக்கும்படி அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

இதையடுத்து, அரசு வெளியிட்டநிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்படுகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நற்கருணை வழங்குவதற்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறுவழங்கப்படும்போது, பக்தர்களுக்கு அப்பம் மற்றும் திராட்சை ரசத்தை தனித்தனி குவளைகளில் வழங்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அக் கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x