Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

அடையாறு கரையோரம் வசிப்பவர்கள் நிவாரண மையம் செல்ல அறிவுறுத்தல் தயார் நிலையில் 169 மையங்கள்

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் தற்போது 22 அடி அளவில் நீர் நெருங்குவதால், பொதுப்பணித் துறை சார்பில் வினாடிக்கு 1,000 கன அடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே, அடையாற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்வான பகுதியில், குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய மண்டலங்களில் உள்ள கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டியதாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்குசெல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் தற்போது 169 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 044-25384530, 044-25384540, 1913 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மண்டலவாரியாக கோடம்பாக்கம் - 9445190210, வளசரவாக்கம் - 9445190211, ஆலந்தூர் - 9445190212, அடையாறு - 9445190213 ஆகியஎண்களையும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x