Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

உப்பனாறு வடிகால் வாய்க்காலை தூர் வாரமாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: உப்பனாறு வடிகால் வாய்க்காலை தூர் வார வேண்டும் என நாகை மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

சரபோஜி: தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு போதுமான நிதி ஒதுக்காததால் வார்டுகளில் பணிகளை தொடங்க முடியாத நிலை உள்ளது. நாகை தேமங்கலம் சாலையில் காட்டாமணக்கு செடிகளும், சீமைக்கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அவற்றை அகற்ற வேண்டும்.

கணேசன்: பொரவச்சேரி தொடங்கி புத்தூர் மஞ்சக்கொல்லை வழியாக கோட்டைவாசல் பகுதியை வந்து சேரும் உப்பனாறு வடிகால் வாய்க்காலை தூர் வார வேண்டும்.

சோழன்: கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வீடுகளில் இன்னமும் கூரையில் தார்ப்பாய் போட்டுதான் வசித்து வருகிறார்கள். அரசின் சார்பில் கணக்கு எடுக்கப்பட்டது என்ன ஆனது என்று தெரியவில்லை?

தலைவர் உமாமகேஸ்வரி: மாவட்ட ஊராட்சிக்கு கேட்கப்பட்ட நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை. நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும். உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அந்த பயிற்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x