Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

தினசரி கரோனா தொற்று 30,000-க்கு கீழ் குறைந்தது

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 30,000-க்கும் கீழாக குறைந்துள்ளது. டெல்லி, கேரளாவை தவிர்த்து இதர மாநிலங்களில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

நாடு முழுவதும் நேற்று 29,163 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. கடந்த4 மாதங்களில் முதல்முறையாக தினசரி தொற்று 30,000-க்கும் கீழாக குறைந்திருக்கிறது.

இதுவரை வைரஸால் பாதிக் கப்பட்டோரின் எண்ணிக்கை 88,74,290 ஆக உயர்ந்துள்ளது. இதில் 82,90,370 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 40,791பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மருத்துவமனைகளில் 4,53,401பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 449 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,30,519 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக 2,535 பேருக்கு வைரஸ் தொற்றுஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 17,49,777 பேர் வைரஸால்பாதிக்கப்பட்டுள்ள நிலையில்16,18,380 பேர் குணமடைந் துள்ளனர். 85,363 பேர் சிகிச்சையில் உள்ளனர். 46,034 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் புதிதாக 1,157 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 8,62,804 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 8,25,141 பேர் குணமடைந்துள்ளனர். 26,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,541 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் புதிதாக 753பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 8,54,764 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 8,29,991 பேர் குணமடைந்துள்ளனர். 17,892 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,881 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் நேற்று 5,792 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 5,33,500 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,61,394 பேர் குணமடைந்துள்ளனர். 70,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,915 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 1,546 பேர், டெல்லியில் 3,797 பேர், மேற்குவங்கத்தில் 3,012 பேர், ஒடிசாவில் 749 பேர், தெலங்கானாவில் 952 பேர், ராஜஸ்தானில் 2,169 பேர், பிஹாரில் 516 பேர், சத்தீஸ்கரில் 1,110 பேர், அசாமில் 186 பேர், ஹரியாணாவில் 2,153 பேர், குஜராத்தில் 926 பேர், மத்திய பிரதேசத்தில் 597 பேர், பஞ்சாபில் 424 பேர், ஜார்க்கண்டில் 166 பேர், காஷ்மீரில் 390 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்றுஏற்பட்டுள்ளது.

தேசிய அளவில் கேரளா, டெல்லியை தவிர்த்து இதர மாநிலங்களில் தினசரி கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x